தலைப்பு செய்திகள்
SUPER!! இனி அரசு விழாக்களில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பூங்கொத்துகளுக்கு தடை!! அதிரடி அறிவிப்பு!!
கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்மந்திரி பகவந்த் மான் தலைமையிலான அரசு 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் சுகாதாரத்துறை தொடர்பான அரசு விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பினை அம்மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
சுற்றுப்புறத்தில் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.மேலும் சுகாதாரத்துறை நிகழ்ச்சிகளில் பூங்கொத்து கொடுப்பதையும் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.