BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நெல்லையில் நடந்த கொலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது.

அதிர்ச்சி அளித்த சப்-இன்ஸ்பெக்டரின் செயல்: குடும்பமே சிறையில் அடைப்பு

நெல்லையில் நடந்த கொலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது தாேட்டத்தில் விளைந்த காய் கறிகளை விற்பனை செய்வதற்காக நைனார்குளம் சந்தைக்கு எடுத்து வந்துள்ளார். அப்போது, அவரை மறித்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சசிகுமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சசிகுமாரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சுப்பையாபுரத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டியனுக்கும், சசிகுமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாகவே கொலை நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டியன், அவரது மனைவி, மகன் உள்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சப்-இன்ஸ்பெக்டரே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )