BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பொம்மிடி அருகே இரு வீட்டில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம் போலீசார் தீவிர விசாரணை.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த சாய் நகர் பகுதியைச் சார்ந்தவர் தன்கதிர்செல்வன் வயது 47 இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரீசியன் பணி செய்து வருகிறார் மனைவி லாவண்யா இவரும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார் காலையில் இருவரும் ஒன்பது மணிக்கு மேல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர்.

இவருடைய மகன் இனியன்  14 தனியார் பள்ளியில் வகுப்பு முடிந்து மாலை 4 மணி அளவில் வீட்டிற்குள் பார்த்த பொழுது முன் வாசல்கள் இரண்டும் திறந்த நிலையில் இருந்ததால் பக்கத்திலிருக்கும் சித்தியிடம் தகவல் தெரிவித்து தன் அப்பாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தன்கதிர்செல்வன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சீட்டு பணம் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபா மற்றும் தோடு கம்மல் உள்பட 2 பவுன் திருபோனது தெரியவந்தது இதை அறிந்த தன்கதிர்செல்வன்  பொம்மிடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

மேலும் பக்கத்து  தெருவில் வசித்து வருபவர் முருகன் 45 ராணுவத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் தற்பொழுது அரூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரிந்து வருகிறார் இவருடைய மனைவி மலர் 37.கணவர் முருகன் பணி நிமிர்த்தமாக அரூர் சென்று வாரத்திற்கு ஒரு முறை வீடு வருவது வழக்கம் மனைவி மலர் அருகில் இருக்கும் விவசாய தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவார் என்று கூறப்படுகிறது .
இதை அறிந்துகொண்ட மர்ம நபர்கள் யாரும் இல்லாத சமயத்தில் சிசிடிவி கேமராவை மேல் துண்டை போர்த்தி விட்டு வீட்டை உடைத்து வீட்டில் இருந்த 4 சவரன் நகை மற்றும் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )