மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவில் காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த V.A. ரவிச்சந்திரன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியிடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 27.04.22 வேலூர் மாவட்டத்தில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ராஜேஷ் கண்ணன், அவர்களால் பாராட்டி வெகுமதி சான்றிதழ் வழங்கினார் மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் K.S.சுந்தரமூர்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் பிரிவு உபசரிப்பு விழா நடத்தி வழி அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.