மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டில் ரமலான் பண்டிகை அமைதியுடன் கொண்டாட்டம்!
பேரணாம்பட்டில் ரமலான் பண்டிகை வருடாவருடம் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் .அதன்படி இஸ்லாமிய சகோதரர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன்படி ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி வீதி குப்பைமேடு அருகே உள்ள ஈத்காக்களில் இஸ்லாமிய நண்பர்கள் அமைதியுடன் தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது தையூப் பள்ளி மிரா, ராஷித் அகமத், இப்ராகிம், உவேஸ், பிலால் உள்ளிட்டோர் தொழுகையில் கலந்துகொண்ட அனைவருக்கும் குளிர் பானங்கள் கொடுத்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பி. எம்.எஸ்.சிவகுமார், வழக்கறிஞர். எல்.கண்ணதாசன், ஜே.ஜே.நகர் எம்.கோபி, வண்டிகார தாமரைச்செல்வம், டெய்லர் வடிவேலு ஆகியோர் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு வாழ்த்துகள் கூறினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.