மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்லில் நகர டிஎஸ்பியை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் 4 மணி நேரமாக காவல்நிலையத்தை முற்றுகை.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் மோகனா இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி முன்பகை காரணமாக இவர்களது உறவினர்கள் கோவிந்தராஜ் தங்கமணி ஆகியோர் முத்துக்குமாரின் வீடு புகுந்து அவரது தாயார் மோகனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முத்துக்குமார் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்தப் புகாரின் பேரில் கோவிந்தராஜ் மற்றும் தங்கமணி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் முத்துக்குமார் மற்றும் அவரது தாயார் மோகனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 03.05.22 போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி முத்துக்குமார் திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞருடன் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் காவல்துறை ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முத்துக்குமார் மீது போட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் சம்பந்தப்பட்ட குற்றவாளி கோவிந்தராஜ் தங்கமணியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த நான்கு மணி நேரத்துக்கு மேலாக தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தெற்கு காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது மேலும் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் எஸ்பி அலுவலகத்தில் வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.