மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வினாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் விமான அலகு குத்து, அக்னி சட்டி,பூங்கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வினாயகபுரம் தெற்கு காடு ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில்
37-ம்ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 27ந் தேதி கணபதி ஹோமத்துடன், சக்தி அழைத்தல், பூச்சாட்டுதல் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி,தினமும் சுவாமிக்கு ஒரு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

வந்த நிலையில், இன்று சமயபுரத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரப் பூஜைகள் செய்து அம்மனுக்கு பொங்கள் மற்றும் மாவிளக்குப் பூஜை முளைப்பாரி எடுத்து அலங்கார வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்,பெண்கள் பூங்கரகம் அக்னிசட்டி எடுத்தும் விமான அலகு குத்தியும் வினாயகபுரம் உடையார்பாளையம், சாரதா பங்க் ரவுண்டனா காந்திநகர் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்,

அப்போது அங்கு ஸ்ரீ சமயபுரத்துமாரியம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பர வாகனத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
