மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்புபொது மக்கள் அதிர்ச்சி.
உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 9 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகள் உயிரிழந்த முறை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஏதாவது மிருகம் வந்து இருக்கலாம் என பொது மக்களுக்கு அச்சம் எழுந்து உள்ளது. அனைத்து ஆடுகளின் கழுத்துப் பகுதியை கடித்த அந்த மிருகம் ரத்தத்தை குடித்த தற்கான அறிகுறியும் மேலும் ஒரு ஆட்டை முழுவதுமாக தின்றும் சென்றுள்ளது.
இந்த அறிகுறிகளை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.