BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் முகாம்களின் வாயிலாக இன்று கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி.

தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி | Corona  vaccine: The work of re vaccination in Tamil Nadu | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News | Tamil News ...

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் முகாம்களின் வாயிலாக இன்று கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பு அபாயம் மிகக்குறைவு என்பதையே மூன்றாம் அலையின் பாதிப்பு உணர்த்தியது. கரோனா நான்காவது அலையில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு பலவகையிலும் விழிப்புணர்வூட்டி வருகிறது. அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களின் வாயிலாக முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களும் செலுத்திக் கொள்ளலாம். இதேபோல், அரசு மற்றும் தனியார் துறையில் பணிசெய்யும் சுகாதாரப் பணியாளர்கள், கரோனாவுக்கு எதிரான போரில் முன்நிற்கும் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தோருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி இலவசமாகவே போடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இதற்கென கூடுதலாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 2800 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல் தமிழகம் முழுவதிலும் மக்களுக்கு எளிதில் தடுப்பூசி கிடைக்கும்வகையில் ஏராளமான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )