மாவட்ட செய்திகள்
திருச்சி அரசு பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளிக்கு சீர் வழங்கும் விழா:
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில்
முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளிக்கு தேவையான பிரோ, மின்விசிறி, மாணவர்களுக்கு தேவையான நோட்டுப்புத்தகம் பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக வழங்கும் நிகழ்வு
தலைமையாசிரியர் புஷ்பலதா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம். மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன், புங்கே நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீவத்ஸவா, புங்கே நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அலுவலர் மோகனபிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இன்று சுமார் 120 மாணவ – மாணவிகள் முதல் வகுப்புக்கு சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள், பை, நோட்டுபுத்தகம், பென்சில், உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.
பேட்டி
1) புஷ்பலதா பள்ளி தலைமையாசிரியர்
2) சமீமாபானு
மாணவரின் பெற்றோர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.