BREAKING NEWS

சிவனாக நடிக்கிறார் யோகிபாபு!

சிவனாக நடிக்கிறார் யோகிபாபு!

ஆர்.கண்ணணுடன் யோகிபாபு

ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நடிகர் யோகிபாபு சிவனாக நடிக்கிறார்.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் உட்பட சில படங்களை இயக்கியவர், ஆர்.கண்ணன். இவர் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதையடுத்து மிர்ச்சி சிவா, யோகிபாபு நடித்துள்ள ’காசேதான் கடவுளடா’ படத்தை இயக்கியுள்ளார். அடுத்து, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் `சயின்ஸ் பிக்சன்’ படத்தை என இயக்கி வருகிறார்.

இதையடுத்து ’பெரியாண்டவர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் யோகிபாபு சிவனாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது என கண்ணன் தெரிவித்துள்ளார்.

‘காசேதான் கடவுளடா படப்பிடிப்பில் இந்தக் கதையை யோகிபாபுவிடம் சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. அவர்தான் கதையின் நாயகனாக நடிக்கிறார். சிவன் பூமிக்கு வந்து ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். அவர்களின் பயணத்தை விவரிக்கும் கதையாக இருக்கும். நாயகியாக நடிக்க முன்னணி நடிகையிடம் பேசி வருகிறோம். யோகிபாபு, கதையின் நாயகனாக கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, மண்டேலா படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் படமும் இருக்கும்’ என்றார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

படத்துக்காக கிழக்கு கடற்கரை சாலையில், சிவன் கோயில் செட் ஒன்று ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட இருக்கிறது. செல்லத்துரை ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )