பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் (கிழக்கு) ராம் – லட்சுமி நகர் உருவாகி 10 ஆண்டுகளாகியும் இதுவரை வாறுகால், சாலை, மின்விளக்கும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் பாபு தலைமையில்.
மாவட்ட துணை செயலாளர் சேது ராமலிங்கம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்செல்லையா, நகர துணை செயலாளர் முனியசாமி, அலாவுதீன், நகரக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.