ஹிப் ஹாப் ஆதி படத்துக்கு அசத்தல் டைட்டில்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்களில் நாயகனாக நடித்தார். இதில் சில படங்கள் அவருக்கு வரவேற்பைப் கொடுத்தன. இவர் அடுத்து நடிக்கும் படத்தை ’மரகநாணயம்’ ஏ.ஆர்.கே.சரவணன் இயக்குகிறார்.
இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். ஃபேண்டஸி காமெடி ஆக்ஷன் படமான இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்கு ’வீரன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.