தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்துவந்த செவிலியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் உள்ள ஓரிடத்தில் சட்டவிரோதக் கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு, கர்ப்பிணிகளின் கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் மாவட்ட மருத்துவத் துறை ஊரகப் பணிகள் இணை இயக்குநர் கனிமொழிக்குப் புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து, அவரது தலைமையில் மருத்துவக் குழுவினர் மற்றும் காவல் துறையினர் செட்டிக்கரை பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள ராஜாபேட்டை ஏரிக்கரை பகுதியில், வெங்கடேசன் என்பவர் வீட்டில் கர்ப்பிணிகளுக்கு நவீன ஸ்கேன் பரிசோதனை கருவி மூலம், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறியது தெரியவந்தது. அத்துடன், கருக்கலைப்பிற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
CATEGORIES தர்மபுரி
TAGS மாவட்ட செய்திகள்