BREAKING NEWS

சாலை விபத்தில் ரசிகர் மரணம்…. தகவலறிந்ததும் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா.

சாலை விபத்தில் ரசிகர் மரணம்…. தகவலறிந்ததும் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா.

நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்த நடிகர் சூர்யா, அவரது வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சூர்யாவைப் போல் அவரது ரசிகர்களும் சமூக அக்கறையோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வருவகின்றனர். இதற்காக நடிகர் சூர்யாவும் பலமுறை தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.


ரசிகர்களோடு எப்போதுமே தொடர்பில் இருக்கும் சூர்யா, அவர்களுடன் அவ்வப்போது போனில் உரையாடி அவர்களது நிறை குறைகளை கேட்டறிந்தும் வருகிறார். ஏராளமான ரசிகர்களின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்துள்ள சூர்யா. ஏதேனும் துக்க நிகழ்வுகளாக இருந்தாலும் நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பார்.

அந்த அளவுக்கு அவர் ரசிகர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கலில் உள்ள ஜெகதீஷின் இல்லத்திற்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.


அப்போது ஜெகதீஷின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த சூர்யா, பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் தயங்காமல் கேட்கும்படி அறிவுறுத்தினார். பைக்கில் செல்லும் போது பாதுகாப்பாக செல்லுமாறு தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )