மாவட்ட செய்திகள்
தற்போது சூரியன் உங்களை எரித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கையில் பசுமை வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னிட்டு கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து கழுகுமலை பேரூராட்சியில் பகுதியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ 1 வார்டு மற்றும் 9 வார்டு அதிமுக வேட்பாளர் செந்தூர் பாண்டியன், மாரியப்பன், 12 வார்டு கருப்பசாமி,10 வார்டு கணபதி அம்பாள்,13 வார்டு முத்துராஜ் பாமா, ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தில் கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், கழுகுமலை நகர இளைஞரணி அணி செயலாளர் கருப்பசாமி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அழகர்சாமி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில் :
கடந்த தேர்தலின்போது திமுக ஒவ்வொரு குடும்ப தலைவியும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறினார்கள் தற்போது வரை 10 மாதங்கள் ஆகிறது இதுவரைக்கும் கொடுக்கவில்லை இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய கடன் பட்டவர்களாக உள்ளனர் திமுக ஆட்சி
மக்களோடு இருந்து மக்களுக்காக பணி செய்யக் கூடியவர்கள் அதிமுகவினர் அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரம் செய்வர்கள் திமுகாவினர் அன்பு செலுத்துபவர்கள் அதிகாரம் செலுத்துபவர்கள் தேவையா என தீர்மானிக்க கூடிய தேர்தல் இது.
தற்போது சூரியன் உங்களை எரித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கையில் பசுமை வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றத்துக்கு சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கு தடையாணை வாங்கியவர்கள் தான் திமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட 15 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றுள்ளனர் திமுகவினர் எனக் கூறினார்.