ஆசியா பணக்கார்ரகளில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்…
இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களாக இருவர் உள்ளனர். இதில் முகேஷ் அம்பானி மற்றும் அதானியும் தான். எனினும் இந்தியா மற்றும் ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் யார் என்பது இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், ஆசியா, இந்தியாவின் பணக்காரா்கள் பட்டியலில் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை சிறப்பான ஏற்றம் பெற்றது. இதனையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.7.74 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.7.66 லட்சம் கோடியாக உள்ளது. இதன்மூலம் ஆசியாவில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். சா்வதேச பணக்காரா்கள் வரிசையில் அம்பானியும், அதானியும் முறையே 8 மற்றும் 9ஆவது இடங்களில் உள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் அம்பானியை அதானி பின்னுக்குத் தள்ளினார். இப்போது முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார் என ஃபுளும்பா்க் ஊடக குழுமம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.