BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பள்ளி கல்வித்துறை இந்த தினத்தை ரத்து செய்தது..!!

பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.

அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னே ரத்து செய்வதற்கான காரணத்தையும் பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் புத்தகப்பை இல்லா தினம் கடைப்பிடிக்கப்பட்டால் மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த போதிய நாட்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தி தேர்வுக்கு தயார் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் புத்தகப்பை இல்லா தினம் ரத்து செய்யப்பட்டது என அறியப்படுகிறது .

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )