BREAKING NEWS

டெலிட் ஆன மெசேஜை திரும்ப கொண்டு வரலாம்!! வாட்ஸ் அப்பில் புது அப்டேட்!!

டெலிட் ஆன மெசேஜை திரும்ப கொண்டு வரலாம்!! வாட்ஸ் அப்பில் புது அப்டேட்!!

வாட்ஸ் அப் செயலியில் லேட்டஸ்ட் அப்டேட் பயனாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய அப்டேட் வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது நாம் தவறுதலாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக அண்டூ (UNDO) என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட உள்ளது. இதற்கு முன் எனக்கு மட்டும் டெலிட் செய்யவும், அனைவருக்கும் டெலிட் செய்யவும் என்ற ஆப்ஷன்கள் உள்ள நிலையில் தற்போது டெலிட் செய்யப்பட்ட மெசேஜை மீண்டும் பார்க்க கொண்டு வரும் அண்டூ (UNDO) ஆப்ஷன் பயனாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றது.

அன்மையில் வாட்ஸ் அப் தளத்தில் பிரத்தியேகமாக எடிட்டர் எதுவும் இல்லாத நிலையில் எடிட் ஆப்ஷனை அறிமுகம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )