மாவட்ட செய்திகள்
ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில்
சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி ஊராட்சியில்
சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது,
ஊத்தங்கரை
கால்நடை உதவி மருத்துவர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்,
மிட்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தடுப்பூசி
செலுத்தினர்,இதில் கால்நடைகளுக்கு
செயற்கை முறை கருவூட்டல்,சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள்,
சிறந்த கால்நடை பராமரிப்பு விவசாயிகளுக்கு விருது வழங்கினர்,
விவசாயிகளுக்கு தீவன பயிர் வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது,இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
CATEGORIES கிருஷ்ணகிரி