தலைப்பு செய்திகள்
ஹிஜாப் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் முற்றுகை போராட்டம்
திருச்சி பிப் 12
கர்நாடக மாநிலத்தில்
தாவனகெரேஹரிஹர மாவட்டத்திலுள்ள
கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்
அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் மாணவிகளை கோரோ செய்தும் காவி துண்டு அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன போராட்டங்களிலும், முற்றுகைகளிலும், சாலை மறியல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சியில்
ஹிஜாப் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்
சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா
தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள GST அலுவலகத்தை நோக்கி அமைப்பை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட கோரிக்கை அடங்கிய பதாகை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பி உரிமை பேரணியல் ஈடுபட்டனர.
மேலும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதில் நிர்வாகிகள் அப்பாஸ் ஷேக், மைதீன், அப்பாஸ்அலி, உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.