திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் திரு கே.சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை மதிப்பு(17.34 லட்சம்) பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு கே சண்முகசுந்தரம் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெய ராமகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பேரூர் கழக செயலாளர் சாதிக் அலி சங்கராம நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா கருப்புசாமி மடத்துக்குளம் ஒன்றிய குழு தலைவர் காவியா ஐயப்பன் துணைத் தலைவர் பிரேமா உத்தமன் பள்ளி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராமராஜ் தலைமை ஆசிரியர் சரவணன் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.