ரசாயன உரம் இல்லாத கிழுவன்காட்டூர் கீரையை கேட்டு வாங்கும் பொதுமக்கள்.

உடுமலை மடத்துக்குளம் பகுதியில் பிரதானமாக தென்னை நெல் கரும்பு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
உடுமலை அருகே உள்ள கிழவன் காட்டூர் பகுதியில் மட்டும் கீரை விவசாயம் அமோகமாக நடக்கிறது.
கீரைக்காக மட்டுமே இந்த பகுதியில் சுமார் 50, ஏக்கர்க்கு மேல் பயன்படுத்தப்படுகிறது இங்கு பாலக் கீரை தண்டங்கீரை பொன்னாங்கண்ணி கீரை அகத்திக்கீரை மணத்தக்காளி கீரை உள்ளிட்ட வற்றை பயிரிட்டுள்ளனர்.
இவைகளை பெண்கள் மூட்டை ஆக கட்டிக் கொண்டு வந்து உடுமலை உழவர் சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்த கீரைகளை ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வியாபாரிகள் அதிக அளவில் வந்து வாங்கி செல்கின்றனர் இது பற்றி கீரை விற்பனையில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில் கிழுவன் காட்டூர் கீரை ரசாயன உரம் கலக்காமல் பயிரிடப்படுவதால் வெளியூரில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
ஒரு கட்டுக்கீரை எங்களிடம் ரூபாய் 10க்கு வாங்கி ரூ15க்கு விற்பனை செய்கின்றனர் உழவர் சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்கிறோம். ரசாயனம் உரம் எதுவும் போடுவதில்லை என்பதால் கீரையின் தரம் குறித்து அறிந்து கிழவன் காட்டூர் கீரையா என கேட்டு வாங்கிச் செல்கின்றனர் கீரை விவசாயம் மூலம் எங்களின் அன்றாட ஜீவனத்திற்கு தேவையான பணம் கிடைக்கின்றன என பெண்கள் தெரிவித்தனர்.
