BREAKING NEWS

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை.

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை.

நிலக்கோட்டை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டி கிராம நிர்வாக அலுவலராக நவாஸ்என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு அரசாங்கத்திலிருந்து வழங்கப்படும் குறைந்த உதவித்தொகையை பெறுவதற்கு சுமார் 20 நாள் காலம் தாழ்த்துவதாக பெண்கள் மற்றும் பொதுமக்கள் புகார் மேலும் பட்டா மாறுதல் வாரிசு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கு அதே அலுவலகத்தில் நான்கு இடை தரகர்களை நியமித்துள்ளதாகவும் அவர்களிடம் பணம் கொடுத்து அவர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இவர் அந்த சான்றிதழை வழங்குவதற்கு கையொப்பமிடுவதாகவும் பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டு எனவே அவரை உடனடியாக மாறுதல் செய்ய வேண்டும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நாங்கள் கிராமங்கள் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி பஸ் மறியல் செய்வோம் எனவும் கூறி மனு அளித்தனர் அதன்பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அவரை பணியிடமாறுதல் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில்சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
செய்தியாளர் ம.ராஜா

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )