தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மானாமதுரை மாணவர்கள் அசத்தல் வெற்றி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜெயபால் மருத்துவமனை எதிரில் UCMACS பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இங்கு நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்,

இந்த மையத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது, அபாகஸ் கற்றுக்கொள்ள பள்ளி மாணவ மாணவிகள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர், இதுகுறித்து பயிலும் மாணவர்கள் தெரிவிக்கும்போது தங்களின் திறமைகளை வெளிக்காட்ட. அபாகஸ் உதவுகிறது எனவும் தாங்கள் ஆர்வத்துடன் படித்து வருவதாகவும் தெரிவித்தனர்,
இந்த நிலையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது இதில் மானாமதுரை UCMACS பயிற்சி மையத்தைச்சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்,
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களின் தலைமையிலும் பயிற்சி மைய இயக்குனர் முல்லை PTபிரபு , ஆசிரியர்கள் சத்யா, கீதா முன்னிலையில் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
TAGS தமிழ்நாடு
