தஞ்சையில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வடபத்ர காளியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வழிப்பட்டு சென்றனர்.

தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தர் கோவில் தெருவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நிசும்பசூதனி என்கிற ஸ்ரீவடபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.


தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் தாத்தா விஜயாலய சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு ஆடை அணிந்து வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வழிப்பட்டு சென்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தமிழ்நாடு
