கோவில்பட்டி அருகே செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஒலிம்பிக் தீபத்தை எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தொடங்கி வைத்தாா்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது இது தொடர்பாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாவட்ட வாரியாக எடுத்துச் சென்று இறுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒலிம்பிக் தீபத்தினை ஒப்படைக்க உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் செஸ் ஒலிம்பிக் விழிப்புணர்வு தீபத்தை ஏற்றி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து தடகள வீரரிடம் தீபத்தை ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் வைப்பாற்று பாலம் வரையில் ஒலிம்பிக் தீபத்தை மாணவர்கள் அதிகாரிகள் அனைவரும் பேரணியாக கொண்டு சென்றனர். இதனையடுத்து தடகள வீரர்கள் ஒலிம்பிக் தீபத்தை எட்டையாபுரம் பகுதிக்கு சாலை மார்க்கமாக எடுத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தாா் சசிகுமாா்,டிஎஸ்பி பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,முத்துக்குமாா்,செயல் அலுவலர் சுந்தரவேல்,மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜ்,விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ, பள்ளி சாரோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனர்.