தலைப்பு செய்திகள்
இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் நகராட்சி பேரூராட்சி தேர்தலில் அதிமுக வினர் வெற்றிபெற அயராமல் பாடுபட வேண்டும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரியில் வேண்டுகோள்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் பரப்புரை தீவிரமடைந்துள்ளது கிருஷ்ணகிரி நகராட்சி பர்கர் காவேரிப்பட்டினம் ஊத்தங்கரை நாகரசம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கிருஷ்ணகிரி சேலம் சாலையில் ஆவின் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும் வாழ்த்தியும் பேசினார்.
இன்றைக்கு ஆட்சி அதிகாரம் திமுகவிடம் உள்ள நிலையில் நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் வகையில் அமையும் அதற்கு அதிமுகவினர் அயராமல் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தல் இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார் தமிழ்செல்வன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்கள். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கொத்துகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.