மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நெருங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இதனால் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் தஞ்சையில் கரந்தை பகுதியில் சிலர் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தை நாய் மீது ஒட்டி உள்ளனர் .
தெருத்தெருவாக சுற்றி வந்த அந்த நாய் தன் மீது ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை அகற்ற தரையில் படுத்து புரண்டி வருகிறது. ஆனாலும் துண்டுபிரசுரம் அகற்றப்படாமல் அந்த நாய் அப்படியே சுற்றி வருகிறது.
CATEGORIES தஞ்சாவூர்