BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் :-

திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியை சேர்ந்தவர் 30 வயதான ராஜி. இவர் ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு வந்துள்ளார்.

தொடர்ந்து இங்கு சில நாட்கள் பெயிண்டிங் வேலை செய்து வந்த ராஜி நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். செவித்திறன் குறைபாடு உடைய இவர் நேற்று ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அங்கு அதிவேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது.

இதில் ராஜி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தொடர்ந்து ரயில்வே போலீஸார் மற்றும் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )