தலைப்பு செய்திகள்
TNPSC குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வு தேதி அறிவிப்பு.
மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என்றும் பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் TNPSC அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு TNPSC சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் TNPSC தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து இருந்தார். தேர்வுக்கான அறிவிப்பு தொடர்பாக சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், “ குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் தொடர்பாக இம்மாதம் அறிவிப்புகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மே 21-ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடத்தப்படும் என்றும் வரும் 23அன்று குரூப் 2, குரூப் 2 a தேர்வுகளுக்கு அறிவிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இதற்கான விண்ணப்பங்களை வரும் 23-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் காலை நேர டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இனி காலை 9.30-12.30 வரை நடத்தப்படும்” என்ஐம் தெரிவித்தார்.