சினிமா
’புஷ்பா’ படத்துக்கு தாதாசாகேப் பால்கே திரைப்பட விருது.
அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’, இந்த வருடத்தின் சிறந்தப் படத்துக்கான, தாதா சாகேப் பால்கே சர்வதேச விருதை பெற்றுள்ளது.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. இதில் மூத்த நடிகை ஆஷா பரேக், லாரா தத்தா, சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, சான்யா மல்ஹோத்ரா உட்பட பிரபல இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இதில் ’83’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் ரன்வீர் சிங்குக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. ’மிமி’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகை விருது கீர்த்தி சனானுக்கு வழங்கப்பட்டது. மூத்த நடிகை ஆஷா பரேக்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த படமாக, விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்துள்ள ’புஷ்பா’ தேர்வானது.