தலைப்பு செய்திகள்
வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த இருவர் கைது.
சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை : பெசன்ட் நகர் ஓடை குப்பம் 179ஆவது வார்டில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தபோது, சிலர் உள்ளே நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துவிட்டு, அச்சுறுத்தும் விதமாக கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் கதிர் என்ற கதிரவன் மற்றும் அவருடன் வந்த 4 பேர் மீது பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், பிரச்சனை ஏற்பட்டதால் பெசன்ட் நகர் ஓடைகுப்பம் உட்பட ஏழு வாக்குசாவடிக்கு மறுவாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் திருவான்மியூர் குப்பத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளான கதிர் என்ற கதிர்வேலன் மற்றும் செல்வக்குமார் ஆகிய 2 பேரை திருவான்மியூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இந்த வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.