தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ குழு திருச்சி வருகை! வார்டன் சகாய மேரியிடம் விசாரிக்க திட்டம்
தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை குறித்து விசாரிக்க சிபிஐ குழு தஞ்சாவூருக்கு வந்துள்ளது. பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளது. ஜாமினில் வெளியே வந்த விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யச் சொல்லி வார்டன் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், மதமாற்றம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரியை போலீஸார் கைது செய்தனர். மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் எனக்கூறி பாஜகவினரும் இந்து அமைப்பினரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக்குழுவினரும் தஞ்சாவூருக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரியை போலீஸார் கைது செய்தனர். மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் எனக்கூறி பாஜகவினரும் இந்து அமைப்பினரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக்குழுவினரும் தஞ்சாவூருக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு மாவட்ட எஸ்பி, கூடுதல் ஆட்சியர், கல்வி அதிகாரி, பிரேதப்பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். இதனிடையே, தனது மகள் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
சிபிஐ விசாரிக்க தடையில்லை இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பீலா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். சிபிஐ விசாரணை நடத்தும் என்று கூறிய அவர்கள், இதனை கவுரவ பிரச்னையாக கருதக்கூடாது என்று தமிழக அரசுக்கு தெரிவித்தனர்.
சிபிஐ முதல் தகவல் அறிக்கை மேலும், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணையில் தலையிடுவது முறையாகாது என்று கருத்து கூறியுள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. குழந்தைகளைத் தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிக்க முடியாத சூழ்நிலை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சிபிஐ டிஎஸ்பி ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். அதில் மாணவியையே புகார்தாரராக பதியப்பட்டுள்ளது. மேலும், சிறுமி 8ஆம் வகுப்பு முதல் மைக்கேல்பட்டி தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், கடந்த ஓராண்டாக பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்து வருவதாக தெரிவித்துள்ளார். அங்கு ஹாஸ்டல் வார்டனாக இருந்துவரும் சகாயமேரி, ஹாஸ்டலில் தங்கி உள்ள பள்ளி மாணவிகளை ஹாஸ்டல், மைதானம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனால் படிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் வாக்குமூலம்
தொடர்ந்து சுத்தம் செய்யச்சொல்லி தன்னை வற்புறுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு விஷ மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோருடன் அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையை தொடங்கிய சிபிஐ சிபிஐ டி.எஸ்.பி ரவி தலைமையில் விசாரணை தொடங்கி உள்ளது. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதி வார்டன் சகாயமேரி சில தினங்களுக்கு ஜாமினில் வெளியே வந்தார். அவரை திமுக எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிபிஐ தற்போது தனது விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தஞ்சை வந்த சிபிஐ குழு சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையிலான குழுவினர் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். அங்கிருந்து தஞ்சை அருகில் உள்ள மைக்கேல்பட்டிக்கு சென்றனர். அங்கு மாணவி தங்கியிருந்த விடுதியிலும் மாணவிகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்துள்ள சகாயமேரியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.