தலைப்பு செய்திகள்
அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளியில் அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் ஜனவரி 9ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற அவர், மேல் சிகிச்சைக்காக கடந்த 15ஆம் தேதி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி மாணவி உயிரிழந்தார். மாணவியின் உயிர் இறப்பு காரணம் விடுதியில் விடுதி காப்பாளர் தன்னை துன்புறுத்தியதாகவும், வேலை வாங்கியதாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விடுதி காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். இந்நிலையில் மாணவி இறந்து ஒரு சில மணி நேரங்களில் தன்னை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து வழக்கை மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என பெற்றோர்களும் பாஜகவினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் மேலும் மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதனை அனைத்து இன்று தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி உள்ள மைக்கேல் பட்டையில் சிபிஐ வித்தியா கூல்கர்னி தலைமையில் 10 கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.