தலைப்பு செய்திகள்
கோவில்பட்டியில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மனைவி இந்திராகாந்தி, போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகர், ஹவுசிங்போர்டு பொதுமக்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மனைவி இந்திராகாந்தி, போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கான கோலப்போட்டி, 11 வயது முதல் 17 வயது வரை திருப்பாவை மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், பந்து சேகரித்தல், பிஸ்கட் சாப்பிடுதல், ஓட்டப்பந்தயம், பன் உண்ணுதல் மற்றும் 11 முதல் 13 வயது வரை ஞாபகார்த்த போட்டி, ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல், லெமன் ஸ்பூன் போட்டி ஆகியவை நடந்தன.
14 முதல் 17 வயது வரை மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல், தெர்மாகோல் உறிஞ்சி நிரப்புதல், மியூசிக்கல் சேர் மற்றும் லக்கி கார்னர், வாளியில் பந்து போடுதல், டம்ளர் அடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஐஸ்வர்யம் ரியல்ஸ் உரிமையாளர்கள் பாண்டியராஜ், வனஜா, தி. சென்னை சலூன்ஸ் ஸ்பா உரிமையாளர் தாமோதரக்கண்ணன், மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி மற்றும் செல்வராஜ், கிருஷ்ணா ஸ்டிக்கர்ஸ் சீனிவாசன் ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.