தலைப்பு செய்திகள்
திருச்சி முகாம் சிறையில்
6 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கை வங்காளதேசம், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அகதிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தங்கள் மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து தண்டனையை அனுபவித்து வெளியேறுவோம், ஆனால் எங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல்
3ஆண்டுகள் இங்கேயே இருந்து வருகிறோம். எனவே எங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறி
6இலங்கை தமிழர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகின்றனர்.
இலங்கை தமிழர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.