பந்தநல்லூரில் கோயில் நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகள் குடியிருப்போர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகள் குடியிருப்போர் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பந்தலூர் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட குழு உறுப்பினர் கலைமணி தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பாலகுரு, ஜெயவீர பாண்டியன், மாரியப்பன்,ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாநில பொருளாளர் துரைராஜ் மாவட்டத் தலைவர் ஜீவபாரதி மாவட்ட செயலாளர் எம்.ராம் மாவட்ட பொருளாளர் எ.கொளஞ்சியப்பன் விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் காசிநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சொந்தமான நிலத்தில் பன்னெடுங்காலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாகுபடி செய்தும் குடியிருந்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் சமீப காலமாக கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என குடியிருப்பு இடத்தை காலி செய்ய நடவடிக்கையிலும், வாடகை உயர்வு, வாரிசுக்கு ஆர்டிஆர் மாற்றம் மறுப்பு என பல்வேறு துயரங்கள் ஏற்படுவதாக கூறி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.