செங்கல்பட்டு அருகே இலவச மருத்துவ முகாம் ; 100-க்கும் மேற்பட்டோர் பயன்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கொங்கணாஞ்சேரி கிராமம் தனியார் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா செந்தில் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் குரோம்பேட்டை ரேலா தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் செவிலியர்களை கொண்டு பயானிகளுக்கு முறையாக,..
கண், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்கள் குறித்து முறையான பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருத்துவ ஆலோசனை வழங்கி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
ரெட்டிப்பாளைம் ஊராட்சிக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.
CATEGORIES செங்கல்பட்டு
TAGS இலவச மருத்துவ முகாம்காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்கொங்கணாஞ்சேரி கிராமம்செங்கல்பட்டு மாவட்டம்ரெட்டிப்பாளைம் ஊராட்சிரேலா மருத்துவமனை