தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி காயத்தாரில் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாக கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்தவர் குருசாமி மகன் வெங்கடேஷ்குமார் பாபு (36) கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் தலைவர்கள் பற்றிய நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அதுகுறித்து சமூகவலை தளத்தில் பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், சமூகத்திற்க்கு எதிராக கலகத்தை துண்டும் வகையில் வாசகங்கள் பதிவிட்டு வெளியிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குபதிவு செய்து வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
CATEGORIES தூத்துக்குடி