பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளை நிலத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை கடித்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம்கண்ணன்– மகேஸ்வரி தம்பதியினர் இவர்கள் பனையூர் கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர் மேலும் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் பனையூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்த்து வருகிறார்.
இப்ப பன்றிகள் கூட்டம் கூட்டமாக தனது விளை நிலத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை கடித்து நாசப்படுத்தி வருவதாகவும் இதனால் தனக்கு பேரிழப்பு ஏற்படுவதாகவும் வேதனையுடன் கூறுகிறார் ஒரு ஏக்கர் மக்காச்சோளம் பயிரிட 25 ஆயிரம் ரூபாய் செலவாகிறது பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிரை நாசப்படுத்துவதால் பெரும் நஷ்டத்திற்குள் தள்ளப்படுவதாகவும் வேதனையுடன் கூறுகிறார்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் சிறிய கிராமத்தில் வளர்த்து வருவதால் இப்பன்றிகள் மூலம் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது எனவேசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயராம் கண்ணன் மகேஸ்வரி தம்பதியினர் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.