BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை கோட்சே போட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று யூட்யூபில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை கோட்சே போட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று யூட்யூபில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார்.

https://youtu.be/ySFS8UgElLEலிபர்டி தமிழ் யூடியூப் சேனலில் உள்ள பதிவில் சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் சென்னை மேற்கு மாம்பலத்தில்
உமா ஆனந்த் என்பவர்
134 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இவரது வெற்றி குறித்து அந்த பகுதியில் லிபர்டி தமிழ் யூடியூப் சேனல் மூலம் கருத்து கேட்கும்போது, ஒருவர் தான் ஒரு இந்து தீவிரவாதி என்பதில் பெருமை கொள்வதாகவும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டுத் தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றிருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் தான் அவர் உண்மையான இந்து என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் இந்த சர்ச்சையான கருத்து கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சந்தோஷ் புகார் அளித்துள்ளார்

இது குறித்து வழக்கறிஞர் சந்தோஷ் கூறும்போது சமீப காலங்களாக சமூக ஆர்வலர்கள் பலரை ஆர்எஸ்எஸ் பாஜக தாக்கியும் கொலை செய்தும் வரும் நிலையில் இதுபோன்ற சர்ச்சையான கருத்து தெரிவித்தவர் மீதும் லிபர்டி யூடியூப் சேனல் மீதும் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )