பவானியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ள பிஏஇஎல் சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைத்து உரிய காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் மண்டல துணை வட்டாட்சியர் மோகனா உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS அரசியல்ஈரோடு மாவட்டம்தமிழ்நாடு அரசுதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்பவானி தாசில்தார் அலுவலகம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
