தலைப்பு செய்திகள்
வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், விடுமுறை தினமான இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.மேலும் சுற்றுலா பயணிகள் படகு இல்லம்,ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா போன்ற இடங்களில் அதிக அளவில் காணப்பட்டனர்.

மேலும் சாலையோர கடைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.பொதுவாக மூன்று மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருவது வழக்கம்.அதாவது கர்நாடகா,ஆந்திரா,கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏற்காட்டை சுற்றிப்பார்க்க ஆவலோடு வருகின்றனர்.அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஆங்காங்கே வாகன நெரிசலும் உள்ளவாறே காணப்பட்டது.மேலும் சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்கா,ஏரிப்பூங்கா, ரோஜா தோட்டம் போன்ற இடங்களில் பொழுதை போக்கி மகிழ்ந்தனர்.
CATEGORIES சேலம்
