தலைப்பு செய்திகள்
கோவில்பட்டியில் அண்ணா பழைய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் .
கோவில்பட்டியில் அண்ணா பழைய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இன்று 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருந்தகம் , நகர் நல மையங்கள், செண்பகவல்லியம்மன் கோவில், வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் கோவில், புதுக்கிராமம் சத்துணவு மையம் ஆர்.சி சர்ச் ,ராஜாஜி பூங்கா, அம்மா உணவகம் உள்ளிட்ட 32 மையங்களில் நகராட்சி சார்பாக முகாம்கள் அமைக்கப்பட்டு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி அண்ணா பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கினார்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமாசெல்வி, ஸ்ரீராம் நகர் நகர் நல மைய மருத்துவர்.
மனோஜ், ஊரணி தெரு நகர் நல மைய மருத்துவர் தாய் லட்சுமி, அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி. கவியரசன்,ஆவின்பால் கூட்டுறவு சொஷைட்டி தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் போடுசாமி, பழனிக்குமார், மகளிர் அணி நிர்வாகி ஜெயந்தி சரவணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.