BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கொரோனாவால் பாதித்தவர்கள் உலகம் முழுவதும் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36.61 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளும் தப்பவில்லை. அந்நாடுகளில் தினசரி லட்சம் எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமீக்ரான் என பல்வேறு திரிபுகளும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 43,57,91,336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36,61,56,426 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59 லட்சத்து 67 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 6,36,67,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75,613 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )