சினிமா
நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முதிர்ச்சியான நடிப்பு மற்றும் செதுக்கப்பட்ட உடல்வாகிற்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிப்பு, இசை என தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்கிறார். 36 வயதாகும் அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், “அனைவருக்கும் வணக்கம்! எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றியபோதும் எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன். விரைவில் திரும்பி வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஸ்ருதி கடைசியாக ‘பெஸ்ட் செல்லர்’ என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தொடரில் நடித்தார். பிரபாஸுடன் ‘சலார்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம் ஸ்ருதியின் முதல் கன்னட திரைப்படமாகும். அதோடு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வேறொரு படத்திலும் நடிக்கிறார்.