தலைப்பு செய்திகள்
10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை.இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
விருதுநகரில் 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விருதுநகரில் உள்ள அரசுப்பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிபவரின் மகள், 15 வயது சிறுமி. இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு, சின்ன பேராலி கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, இருவரும் கடந்த ஓராண்டாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி மாணவியின் தாயார் வெளியூர் சென்றுள்ளார்.
இதனை அறிந்த, அய்யனார் மாணவியை ஆசை வார்த்தை கூறி புல்லலக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச்சென்ற, அங்கு வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். தொடர்ந்து, கடந்த 26ஆம் மாணவியை தனது சொந்த ஊரான சின்னபேராலிக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கருப்பசாமி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த தையல் ஆசிரியை, இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் அய்யனார் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், இதுதொடர்பாக அய்யனார் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.