தலைப்பு செய்திகள்
ஒசூரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்
அதிமுகவினர் மீது திமுக தொடர்ந்து இதுப்போன்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக கூறி
அதிமுக தலைமை பிப்ரவரி 28ல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது
அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரில் மாநகர செயலாளர் நாராயணன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தை
முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் தொடக்கி வைத்தி கண்டன உறையாற்றினார்
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி ரவிக்குமார் கிருஷ்ணன் ஜெயபால் ஜெயபாலன் கணேஷ், பாசறை மாவட்ட செயலாளர் ராமு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன்,
எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜே பி என்கின்ற ஜெயப்பிரகாஷ், எம்ஜிஆர் மன்ற தலைவர் தலைவர் சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், நாராயண ரெட்டி, மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கழக தோழர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,