தலைப்பு செய்திகள்
ரேஷன் கடையில் நேரம் மாற்றம்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நியாயவிலைக் கடைகள் செயல்படும் வேலை மற்றும் நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
CATEGORIES Uncategorized